
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் சமீபத்தில் பதவி ஏற்ற நிலையில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறை தீர்க்கும் வகையிலான மனுக்களை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 மணியளவில் நேரில் பெற உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தில் பார்வையாளர்கள் அறையில் மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழ்நாடு காவல்துறையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.