
ஓரளவு நல்ல வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன் இன்றைக்கு இளைஞர்கள் 20,000 முதல் 30,000 என சம்பாதித்து எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். இதனால் என் ஹவுஸ் ஓனர் வாடகையை ஏற்று விட்டனர் எல்லாமே விலை ஏறி விட்டது என்னைப் போன்றோர் நசுக்கப்படுகிறோம் என்று ஒருவர் குழம்பினார்…
ஒரு சிறிய மரத்தில் குருவி கூடு கட்டி முட்டைகள் இட்டு குஞ்சு பொரித்தது. அடுத்த ஆண்டு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது அடுத்தடுத்த ஆண்டுகளில் இது தொடர குட்டையாக இருந்த மரம் வளர வளர குருவிகள் கூடு உயர போய்விட்டது. குருவிக்கு கோபம் வந்தது ஏன் மரம் எப்படி வளர்ந்து கொண்டே போகிறாய் நான் எப்படி என் கூட சென்றடைவது வளர்ந்தது போதும் நிறுத்திக்கொள் என்றது. உடனே மரம் உனக்கு முட்டையிட இடம் கொடுத்தேன் குஞ்சு குடும்பம் என்று நீ வளர்வதைப் போல் நானும் கிளை விரித்து வளர வேண்டாமா? நீ தாழ்வான கிளையில் கூடு கட்டி என்றது அந்த முட்டாள் குருவி போலதான் நீங்களும் நீங்கள் மறந்தது போல் உங்களை சுற்றியுள்ள சமூகம் வளர வேண்டாமா. நல்லதோ கெட்டதோ மாற்றம் என்று வந்துவிட்டால் ஒருவரின் வசதிகள் கூடுவதும் மற்றவர் தாழ்த்தப்படுவதும் இயல்பாகவே நடக்கக்கூடியதாகிவிட்டது. அதற்காக பெரும்பான்மையோர் நலம் விளைக்கும் மாற்றத்தை வேண்டாம் என்று நிராகரிக்கலாமா. நேற்று வரை நீங்கள் உங்கள் ஊதியத்தில் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த பல வசதிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் உங்களுக்கு கீழ் எவ்வளவு பேர் இருக்கின்றனர் அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் அடுத்தவர் வருமானம் உங்களை விட கூடுதலாய் விட்டால் நீங்கள் நசுக்கப்பட்டதாக உணர்கிறீர்கள் இது நியாயமா. உங்கள் அசதிகள் குறைந்து விட்டதற்காக மற்றவரை குறை சொல்வதை நிறுத்துங்கள். எதுவும் முடிந்துவிடவில்லை உங்கள் நிலையும் மேலும் உயரமான வாய்ப்புகளை ஒழித்து வைத்திருக்கிறது இந்த உலகம். எந்த கணமும் அப்படியே நிலைத்து நிற்பது இல்லை என்பது தான் வாழ்க்கையின் சுவாரசியம் மாற்றத்தை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையென்றால் வலியும் வேதனையும் தான் மிஞ்சும்..!!