குலசை தசரா விழா: பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை..!!

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுக்கள் கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை பிரிப்பார்கள். தசரா குழுவினர் திருவிழாவின் போது நடந்து கொள்ளும் முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாசில்தார் வாமனன், உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

Read Previous

நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!!

Read Next

இன்றைய ராசிபலன் 05-10-2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular