நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் என்பது இருக்கும். இந்த குலத்திலேயே இந்த குலதெய்வம் தான்யா காக்குது என்று பெரியோர்கள் சொல்லி நம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் குலத்தினை காக்கும் குலதெய்வத்தை வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதை பற்றி பார்க்கலாம். தெய்வங்களிலேயே மிகவும் வலிமையான தெய்வம் என்றால் அது குலதெய்வம் வழிபாடு தான் என்று நம்பப்படுகிறது. மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களை கூட நம் குழந்தை வந்தான் பெற்று தருகிறது என்றும் முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்தி விடாதீர்கள் அதன் சக்தி அளவிட முடியாதது. அனைவரும் மாதத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வத்தை குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். குலதெய்வத்தை எவர் ஒருவர் தொடர்ந்து வழிபட்டு வருகிறாரோ, அவர் எல்லா செல்வங்களும் பெற்று கேட்கும் வரம் எல்லாம் அந்த குலதெய்வம் அருளுமாம்.
ஒரு குடும்ப வம்சாவளியில் தாத்தா பாட்டி தாய் தந்தை போன்றோர்கள் குலதெய்வத்தை வணங்குவதற்கோ பூஜை செய்வதற்கும் முறையாக செய்ய தவறினாலோ குலதெய்வத்தை அடியோடு மறந்து இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் உங்களை தாக்கும் என்பது அப்பட்டமான உண்மை. இந்த சாபம் நமது அடுத்த சந்ததியினரை தாக்காமல் இருக்க சாபநிவர்த்தி செய்வது மிகவும் அவசியம். குலதெய்வத்தை வம்சாவளியான நம் முன்னோர்கள் எவ்வாறு வணங்கினார்களோ அதே வழியில் நாமும் வணங்க வேண்டும். தவறுக்காக குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் சாபம் தீரும். குறிப்பாக பெண்களுக்கு புகுந்த வீட்டு குலதெய்வம் பிறந்த வீட்டு குலதெய்வம் என்று இரண்டு குலதெய்வம் உண்டு திருமணத்திற்கு பின் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம் என்பதும் முன்னோர்கள் கூறியது. ஆகவே ஒவ்வொருவரும் தனது குலதெய்வத்தை முதலில் வழிபடுவது குறிப்பாக நம் முன்னோர்கள் எவ்வாறு குலதெய்வத்தை வழிபட்டர்களோ அதை பின்பற்றி வழிபடுவது மிகவும் நல்லது.




