மத்தியப்பிரதேசத்தின் நீமுச் பகுதியில் குளவிகள் தாக்குதலில் இருந்து 20 குழந்தைகளைக் காப்பாற்றிய அங்கன்வாடி சமையல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் அருகில் கிடந்த தார்ப்பாலின், பாய் கொண்டு குழந்தைகளை காஞ்சன் மேஹ்வால் என்பவர் மூடியுள்ளார். நூற்றுக்கணக்கான குளவிகள் அவரை தாக்கிய நிலையில், நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




