நாம் குளிக்கும் போது அல்லது மழையிலோ இல்லை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நனைய நேரிட்டாலோ சில நேரங்களில் நமது காதுகளுக்குள் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது அப்படி உங்கள் காதுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதை வெளியேற்ற உடனடியாக என்ன முதலுதவி செய்ய வேண்டும். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.
காதில் தண்ணீர் புகுந்தால் முதலில் தலையை சாய்த்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சிக்க வேண்டும் எந்த காதில் தண்ணீர் புகுந்ததோ அந்த பக்கம் கீழாக வைத்து மற்ற பக்கத்தில் சரியாக அடித்து பிறகு ஒரு மென்மையான துணியினால் காதை துடைக்க வேண்டும்.
இதனை அடுத்து ஹேர் ட்ரையர் போன்ற நீரை உலர்த்தும் கருவிகளை குறைந்த வெப்பநிலையில் ஆபரேட் செய்து காதின் துளையை சூடாக்க வேண்டும். இந்த முதலுதவின் மூலம் காதில் தண்ணீர் புகுந்தது வெளியேறவில்லை எனில் உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே காதுக்குள் எந்த ஒரு சொட்டு மருந்தையோ, எண்ணையையோ விடக்கூடாது. ஏனென்றால் அவை காதுகளுக்குள் சென்று ஏதேனும் தொற்றுநோயை ஏற்படுத்த வழி வகுக்கும். காது மென்மையான பகுதிகளை பாதிப்படையச் செய்யும். எப்போதும் காதுகளை சுத்தம் செய்ய கூர்மையான குச்சி போன்றவற்றை உபயோகிக்க கூடாது.
மேலும் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் கூடாது. குளிக்கும்போது காதுகளில் தண்ணீர் செல்வதை தடுக்க அடைப்புகளை பயன்படுத்தி பாதுகாப்பாக குளிக்க வேண்டும். மேலும் எப்போதும் காதுகளில் ஈரம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். இதற்கு ஹீட்டிங் பேடையும் உபயோகிக்கலாம்.