
நாம் அனைவரும் குளிக்கையில் சுடு தண்ணீர் அல்லது வீட்டிற்கு வரும் சாதாரண பதத்தில் இருக்கும் நீரை தான் பயன்படுத்துவோம். அனால் நம்மில் எத்தனை பேருக்கு ஐஸ் கட்டிகளில் குளிக்கும் நன்மையை பற்றி தெரியும். தினமும் ஐஸ் கட்டியில் குளிக்கும் சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி குளிர் நீரில் குளிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
இதற்கு ஐஸ் கட்டி தெரபி என பெயர் உண்டு. நம் உடல் அதிகமாக உழைத்த பிறகு இதை செய்தால் தசை பிடிப்புகள் மற்றும் தசை வலிகள் குறையும். மேலும் உடலில் இருக்கும் வலிகள், வீக்கம் அனைத்தையும் நீக்கி புத்துணர்ச்சி தரும். அதுமட்டுமில்லாமல் இது நமது உடலில் இருக்கும் கழிவு பொருட்களை நீக்க உதவி செய்யும்.
தூக்கம் நன்றாக வர தூங்குவதற்கு முன்பு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இதில் குளிக்க வேண்டும். மேலும் இதற்கு நோய் எதிர்ப்பு சக்திகளும் இருக்கிறது என நெதர்லாந்தின் ஆய்வுகள் கூறுகின்றன. நமது மன அழுத்தத்தையும் உடல் சோர்வையும் குறைக்கும் திறன் கொண்டது இந்த தெரப்பி.