நம்மில் பலரும் குளிர்ந்த நீரையே அருந்தி வருகிறோம், கோடைகாலமாக இருக்கட்டும் குளிர்காலமாக இருக்கட்டும் குளிர்ந்த நீரின் மீது பலருக்கும் மோகம் அதிகம். தாகத்தை தணிப்பதாகவும் உடலுக்குள் குளுமை ஏற்படுவதாக குளிர்ந்த நீரையே நாம் அருந்துகிறோம்.
அதிகளவு குளிர்ந்த நீரை குடிப்பதனால் உடலில் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வலிகள் உள்ளவர்கள் குளிர்ந்த நீரை குடிக்க கூடாது ஏனெனில் குளிர்ந்த நீரை குடிப்பதனால் இதய வலி மற்றும் சில நேரங்களில் மாரடைப்பும் நிகழும், குளிர்ந்த நீர் குடிப்பதனால் மூளை தண்டுவடத்தில் நரம்புகள் குளிர்ச்சி அடைந்து திடீரென ரத்த உரைதல் நிகழ்வும் ஏற்படும், உடற்பயிற்சி முடித்த உடனே குளிர்ந்த நீர் குடிப்பதனால் தசை வலி மற்றும் தசை பிடிப்பிற்கு வழி தரும் மேலும் உடல் வலி இருப்பவர்கள் குளிர்ந்த நீரை அருந்தவே கூடாது, குளிர்ந்த நீர் வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர், முடிந்தவரை குளிர்ந்த நீரை குடிக்காமல் தவிர்ப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று கூறுகின்றனர்..!!