குழந்தைகளுக்கு ஆதார் இருக்கிறதா? அதை பெற என்ன செய்ய வேண்டும் ? – முழு விவரம் இதோ..!!

நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக விளங்கி வரும் ஆதார் அட்டை பிறந்த குழந்தைகள் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான ஆதார்:

பிறந்த குழந்தைகள் முதல் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் தனித்துவ அடையாள ஆணையம் 12 இலக்க தனித்துவ எண்களுடன் கூடிய ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. அனைத்து விதமான பணிகளுக்கும் ஆதார் முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. எனவே கட்டாயம் பொதுமக்கள் அனைவரும் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் குறித்த விவரங்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் பால் ஆதார் அல்லது நீல ஆதார் என்று அழைக்கப்படுகிறது.

இதற்காக ஐந்து வயது குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அவர்களின் பெற்றோர்களின் யுஐடியுடன், குழந்தைகளின் யூஐடி எண் இணைக்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது கடந்த பிறகு ஆதார் அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கு பொதுமக்கள் UIDAI இணையதளத்தில் சென்று புதிய ஆதார் அட்டைக்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். குழந்தைகளின் பெயரையும் பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் தேவையான விவரங்களை உள்ளிட்டு, அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் உங்களுக்கான அப்பாயின்மென்ட்டை முன்பதிவு செய்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

Read Previous

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை..!!

Read Next

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular