குழந்தைகளுக்கு ஆதார் கார்டை 2 முறை புதுப்பிக்க வேண்டும்..!! அரசு கொடுத்த முக்கிய தகவல்..!!

நாம் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக திகழ்வது ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டு அனைத்து அரசு பணிகளுக்கும், அரசு சார்ந்த சேவைகளுக்கும் மற்றும் வேறு ஆவணங்களை பெறுவதற்கும் முக்கியமாக தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கும் இந்த ஆதார் கார்டு தேவைப்படும் என்பதால் 2018 ஆம் ஆண்டு அரசு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக “பால் ஆதார்” கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த ஆதார் கார்டில் பெரியவர்களுக்கு எடுப்பது போல் கண்விழி மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் எடுக்கப்படாததால், குழந்தைகளுக்கு 5 வயதாகும் போது இந்த ஆதார் கார்டை அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 வயதில் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்வது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு 15 வயது ஆன பிறகும் அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் வளரும் போது அவர்கள் கண்விழி மற்றும் கைரேகை போன்றவை மாறுபடுவதால் 2 முறை குழந்தைகளுக்கு ஆதார் அப்டேட் செய்வது அவசியமாகும்.

Read Previous

தபால் துறையில் காலிப்பணியிடங்கள்..!! வெளிவரப்போகும் ரிசல்ட்டுகள்..!!

Read Next

எம பயம் நீங்க இந்த ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular