குழந்தைகளுக்கு எல்லா நேரமும் டயப்பர் பயன்படுத்திவரும் பெற்றோர்களுக்கே இந்த பதிவு ஆகும்.
குழந்தைகளுக்கு டயப்பர்:
இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்களது வசதிக்கேற்பவும், வேலையை குறைக்கவும் குழந்தைகளுக்கு அனைத்து நேரங்களிலும் டயப்பர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இதில் சில தீமைகள் இருக்கின்றது என்பதை தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்த வித கெடுதலும் இருக்காது.
இவற்றை துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் இன்று கெமிக்கல் கலந்த மாடர்ன் டயப்பர் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவற்றை குழந்தைகளுக்கு அணிவித்தால் தீங்கு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. மாடர்ன் டயப்பரில் சில விஷப்பொருட்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை குழந்தைகளின் உடல்நலனை பெரிதும் பாதிப்பதுடன், சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றதாம்.
எனவே தாய்மார்கள் குழந்தைகளுக்கு வேதிப்பொருள்கள் பயன்படுத்தாத சுத்தமான காட்டன் டைப்பர்கள் பயன்படுத்தினால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்.