குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மிகவும் அவசியம் என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர், ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் பல நோய்களுக்கு ஆளாக என்றும் அதன் மூலம் குழந்தைகள் மனம் மற்றும் உடல் ரீதியாக நோய்கள் ஏற்படுகிறதாகம் மருத்துவர்கள் கூறுகின்றனர்…
ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தி கொண்டுவர வேண்டும், காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை சமைத்து குழந்தைகளுக்கு தருவதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்வாறு அதனை சமைத்து தர வேண்டும், பீடா பர்கர் பிரெஞ்ச்ரைஸ் பானிபூரி மற்றும் இனிப்பு உணவுகளை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் முழுதும் பாதிப்படைந்து குழந்தைகளுக்கு நோய்களை ஏற்படுகிறது, உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளை பாலில் சேர்த்து சாக்லேட் பவுடர் உடன் சேர்த்து கொடுப்பதன் மூலம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதும் உண்டு, உணவு நேரங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு பசி எடுத்தாலும் அல்லது ஏதேனும் சாப்பிட ஆசைப்பட்டால் ஜங் மற்றும் தின்பண்டங்கள் தருவதை காட்டிலும் பழங்களை தருவது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!