குழந்தைகளுக்கு நன்றாக பசிஎடுக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஓர் ஆரோக்கிய பானம்..!!

தேவையான பொருள்:

துளசி இலை 10 எண்ணிக்கை
பனை வெல்லம் தேவையான அளவு
புதினா இலை 5 எண்ணிக்கை
வெற்றிலை பாதியளவு
இஞ்சி சிறிதளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் பனை வெல்லம் தவிர மீதி உள்ள எல்லா பொருட்களையும் நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இந்த நீருடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான இந்த நீரை 10 மாத குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி மற்றும் 1-3 வயது உள்ள குழந்தைகளுக்கு மூன்று தேக்கரண்டி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் கொடுக்கவும்.
  • தொடர்ந்து 3 நாட்கள் இந்த நீரை குடித்து வர குழந்தைகளுக்கு பசி தன்மை அதிகரிக்கும்.

Read Previous

ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் அப்டேட்..!!

Read Next

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பிரபலங்களின் 8 திரைப்படங்கள் ரிலீஸ்.. என்னென்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular