குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க..!! இவைகள் மட்டும் போதும்..!!

தேவையான பொருள்:

வல்லாரைக்கீரை ஒரு கப்
கறிவேப்பிலை  கால் கப்
கொள்ளு  கால் கப்
உளுந்தம் பருப்பு 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 7
பெருங்காயத்தூள் சிறிதளவு
சீரகம்  கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • வல்லாரைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி, நிழலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
  • கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் வறுத்து, ஆறவைத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
  • அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை, கறிவேப்பிலையை அதில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
  • சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

Read Previous

சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்..!! காலை 10:00 மணி முதல்..!!

Read Next

கடத்தியவரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத 1 வயது குழந்தை..!! வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular