குழந்தைகளுக்கு பிடிக்கும் மிக சத்தான கேழ்வரகு தட்டை..!! சத்தான மற்றும் சுவையான செய்முறை இதோ..!!

நமது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் பல சத்துக்கள் நிறைந்திருக்கும் கேழ்வரகு வைத்து கேழ்வரகு தட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – அரை கிலோ
கடலைப்பருப்பு – 50 கிராம்
வறுத்த உளுந்து – 50 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

கேழ்வரகு நன்கு அரைத்து மாவாக்கி கொள்ள வேண்டும். இந்த மாவுடன் வருத்த உளுந்து சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு மிளகாய் தூள் கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

மாவை சிறிதளவு உருண்டையாக உருட்டி வாழை இலையில் போட்டு மெல்லியதாக தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு தட்டி வைத்திருக்கும் தட்டைகளை ஒவ்வொன்றாக போட்டு வேகவிட்டு பொரித்திருக்கவும். அவ்வளவுதான் கேழ்வரகு தட்டுவடை தயார்.

Read Previous

காலிஃப்ளவர் சுக்கா எப்படி செய்வது என்று பாருங்கள்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

தரம்சாலாவிலேயே சிக்கிக்கொண்ட வீரர்கள்..!! உடனடியாக அவசர ரயிலை இயக்கிய இந்திய அரசு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular