இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வாசிப்பைக் காட்டிலும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி உள்ளதே அதிகமாகிற,து அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தைகளை சரியான முறையில் வழிநடத்தும் போது குழந்தைகளுக்கு தேவையான கல்வியறிவு அவசியமாக இருக்கிறது..
சிறு குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவதில் முதலில் வீட்டில் உள்ள பெற்றோர்கள் அல்லது பள்ளிகளிலோ வாசிப்பு உகந்த சூழ்நிலைகளையும் சூழல்களையும் உருவாக்க வேண்டும், குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், வீட்டிலேயே ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கி அந்த நூலகத்தின் பயன்பாட்டை குழந்தைகளுக்கு தெரிய படுத்த வேண்டும், இதன் மூலம் குழந்தைகள் புத்தகத்தை எடுப்பது ஏதாவது ஒன்றை கிறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் போது குழந்தைகளுக்கு கற்கும் திறனும் கற்கும் ஆசையும் வந்துவிடும், பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் புத்தகம் வைத்து குழந்தைகளுக்கு கதைகளையும் அல்லது பாடங்களையும் கூறும் பொழுது குழந்தைகளுக்கு உற்சாகத் தன்மையோடு அதனை கவனிக்கும் பழக்கத்திற்கு தங்களை தள்ளி விடுகின்றனர் இதன் மூலம் குழந்தைகள் ஈசியாக வாசிப்பை நோக்கி ஓடும்..!!