
Oplus_131072
குழந்தைகள் தூங்கும் போது ஏன் சிரிக்கின்றது தெரியுமா..?? ஆச்சரியமான தகவல் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
பிறந்த குழந்தைகள் பல நேரங்களில் அழகாக சிரிப்பதை நாம் பார்த்திருப்போம். அதுவும் பிறந்த குழந்தைகள் தூங்கும் போது திடீரென்று சிரித்துக் கொண்டே தூங்குவார்கள். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே கூறி இருப்பார்கள் குழந்தை கனவு கண்டு அதில் ஏதாவது சிரிப்பதை போல் தோன்றுகிறது அதனால் தான் குழந்தை சிரிக்கிறது என்று. ஆனால் அதை பலரும் நம்ப மாட்டோம். பிறந்த குழந்தை கனவு காண்கிறதா இது என்ன ஏமாற்று வேலை என்றுதான் அனைவரும் நினைப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா..??
குழந்தை பிறந்து இரண்டு வாரத்திலேயே கனவு காண தொடங்கிவிடும். குழந்தை எப்போதும் தனது தாயின் அரவணைப்பிலேயே இருப்பதால் குழந்தை தூங்கும்போது அதை நினைத்து கனவு வரும் அப்போது குழந்தை சிரிக்குமாம். என்று கூறப்படுகிறது. அதேபோல் தூங்கும் போது குழந்தைகள் அழுகவும் செய்யும். குழந்தைகள் பிறந்து 18 மாதங்களுக்குப் பிறகு குழந்தையின் கற்பனை திறன் வேகமாக வளரும் நேரங்களில் கனவுகள் பயமுறுத்துவது போல் அடிக்கடி தூங்கும் நேரத்தில் வரும் இதனால் குழந்தைகள் தூங்கும் போது அழுகின்றன.