
குழந்தைகளை குளிப்பாட்டும் போது: நன்றாக பிடித்துக்கொள்ளுங்கள். தண்ணீர் உடம்பில் பட்டதும், திடீரென குழந்தைகள் துள்ளிவிடுவார்கள். அது அவர்கள் கீழே விழுந்து விடவும் வழி வகுக்கும்.
#உணவு ஊட்டும் போது: தாய்மார்களே நீங்கள் வயிறார உண்ட பின் உங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுங்கள். பசியா இருந்தா நீங்கள் நீங்களாக இருக்க மாட்டீர்கள். நீங்களே பசியில் உணவு ஊட்டும் போது, சாப்பிட மறுக்கும் குழந்தை மீது கோவம் தான் வரும். நிதானத்தை இழப்பீர்கள். உணவு மிச்சமாகும். அதுவே நீங்கள் சாப்பிட்ட பின் உணவை ஊட்டும்போது எத்தனை நேரமானாலும் பொறுமையாக உணவை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.
குழந்தைகளுக்கு எதை காண்பிக்கிறோம் என்பதில்: பெரும்பாலான வீடுகளில் நடக்கும் தவறு இது தான். நம் சவுகரியத்திற்காக குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து விட்டு செல்வது. தொந்தரவு இல்லாமல் இருந்தால் சரி என்று எண்ணுவது. இது குழந்தையின் கண்களை மட்டுமல்ல எதிர்காலத்தையே பாதிக்கும்.
யாரை எப்படி குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறீர்கள் என்பதில்: இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆண் குழந்தைகளும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். உறவினர் அல்லாதவரை, உறவு சொல்லி அழைக்க சொல்லிக் கொடுக்காதீர். நம்ம அம்மா அப்பா தானே இவர்களை மாமா என்றழைக்க சொன்னார் என்று குழந்தைகளுக்கு அவர் மீது நம்பிக்கை கூடும். அதுவே நீங்கள் இல்லாத பட்சத்தில் அந்த ஒருவர் உங்கள் குழந்தைகளை தவறாக நடத்த வழிவகுக்கும். மரியாதையுடன் அழைக்க கற்றுக்கொடுங்கள்.
விளையாடும்போது: எங்கே இருக்கிறார்கள்? எப்படி இறங்குகிறார்கள்? எப்படி ஏறுகிறார்கள்?. யாருடன் விளையாடுகிறார்கள்? எங்கே சென்று ஒளிகிறார்கள். சமையல் செய்து கொண்டிருக்கும் போதே ஒரு கண் குழந்தையின் நடமாட்டத்தை நோக்கட்டும். குழந்தையின் சத்தம் குறையும் போது சிறிது கூடுதல் கவனம் தேவை தான்.
நட்பு பாராட்டுதலில் : மிக முக்கியமாக, வயதையொத்தவர்களுடன் மட்டும் நட்பு பாராட்டுகிறார்களா என்பதில்.
பேசும் வார்த்தைகளில்: எந்த மாதிரியான சொற்களை பயன்படுத்துகிறார்கள் என்பதில். வீட்டை விட்டு செல்லும் குழந்தை பல புதிய சொற்களை (தவறான சொற்களையும்) கற்றுக்கொண்டு வரும். தவறாக இருக்கும் பட்சத்தில் சரி செய்துவிடுங்கள்.
கேட்பதில் : எந்த மாதிரியான உரையாடல்களை கேட்கிறார்கள் என்பது மிக முக்கியம். நீங்கள் சரியானதை பேசுங்கள்.
வீட்டை விட்டு பள்ளிகளுக்கு அனுப்பும்போது: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அனுப்புங்கள். என்னவாக வேண்டும் என்ற கனவுகளையும், விருப்பங்களையும் அவர்களே தேர்வு செய்யட்டும்.
குழந்தைகளின் எதிர்கால கனவில்: டாக்டர் ஆக போறியா? எஞ்சினியர் ஆக போறியா? என்ற option-யை கொடுத்து, அதை தாண்டிய ஒரு பார்வையை பார்க்க முடியாமல் ஆக்கி விடாதீர்கள். கவனம் தேவை.