
ராஜஸ்தான் மாநிலம், தௌசா மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.அந்த குழந்தை விநாயகரைப் போன்று முக அமைப்புடன் பிறந்தது. குழந்தையின் முகம் ஒரு தண்டு போன்ற வடிவத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த விசித்திரமான குழந்தையை பார்க்க மக்கள் குவிந்தனர்.ஆனால் பிறந்த 20 நிமிடத்தில் குழந்தை இறந்தது.மரபணு குறைபாடுகள் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.