
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள ஒன்றரை வயது குழந்தைக்கு கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை அழுகியதால் மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்றி உள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிசா, “மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கை எங்களுக்கு கையில் கிடைத்துவிட்டது. ஆனால், இந்த மருத்துவ அறிக்கையில் எங்களுக்கு துளிகூட திருப்தியே கிடையாது. ஏனென்றால், நாங்கள் கூறியது வேறு. நாங்கள் எழுதிக் கொடுத்த புகார் என்பது வேறு. ஆனால், மருத்துவக் குழு அறிக்கையில் வந்துள்ளது அதற்கு எதிர்மாறாகத்தான் வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.