குழந்தை இல்லாததால் மனைவியை கொலை… கணவன் சிக்கியது எப்படி.? காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்.!!

விருதுநகர் மாவட்டத்தில் திட்டமிட்டு மனைவியை கொலை செய்துவிட்டு நடமாடிய கணவரை  காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கட்டாலங்குளம் பகுதியில் சார்ந்த கிருஷ்ணனின் மகன் பழனி (வயது 27) இவருக்கும் பனைக்குடி பகுதியை சார்ந்த பாண்டி என்பவரது மகள் முத்துவல்லி (வயது 24) என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கணவருடன் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டில் இருந்துள்ளார் முத்துவள்ளி. இதனை தொடர்ந்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரிடமும் சமாதானமும் ஏற்பட்டு பழனியுடன் சென்றுள்ளார் முத்துவள்ளி. கடந்த ஜூன் 30-ம் தேதி மனைவியின் அக்காவை தொடர்பு கொண்ட பழனி முத்துவள்ளி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த முத்துவள்ளி குடும்பத்தினர் பழனிக்கு எதிராக காவல் துறையில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் முத்துள்ளியின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் சோதனை நடத்தியதில் அவரது கழுத்து ,நெஞ்சு, முகம் போன்ற இடங்களில் காயம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து பழனியை கைது செய்த காவல்துறையினர் நடத்திய கிறுக்கு பிடி விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

Read Previous

எனது குப்பை எனது பொறுப்பு..!!

Read Next

நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular