
குழித்துறையில்
பிரபல ரிசாட்டில் தங்கியிருந்த தனியார் நிறுவன எம்டி பரிதாப சாவு
களியக்காவிளை, ஜூலை. 27-
கேரளா மாநிலம் கோட்டையம் காந்திநகர் பட்டத்தானம் பகுதியைச் சேர்ந்தவர் பேபி மேத்யூ (59 ), இவர் இந்தியாவிலிருந்து , வெளிநாடுகளுக்கு மாணவர்களை மருத்துவம் மற்றும் பொறியல் படிப்புகள் படிக்க அனுப்பி வைக்கும் ஒரு ஏஜென்சி நிறுவனத்தில் எம்டி-யாக பணிபுரிந்து வந்துள்ளார், இந்நிலையில் மார்த்தாண்டம் வந்திருந்த இவர் குழித்துறை அடுத்த பழவாறு பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்துள்ளார், 26- ஆம் தேதி விடிய காலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலறியுள்ளார், உடனடியாக அவரது ஓட்டுநர் ஸ்ரீகாந்த் மற்றும் ரிசார்ட் ஊழியர்கள் சேர்ந்து களியக்காவிளையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் , பின்னர் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.