குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த முகாமில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது. மொத்தம் 27 குழுக்களுக்கு ரூபாய் 3 கோடி 41 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வங்கி பெருங்கடனும், மற்றும் சுய உதவி குழுக்களுக்கு குழுக்கடனும் வழங்கப்பட்டது. மகளிர் திட்ட இயக்குனர் வானதி தலைமையில், உதவி திட்ட அலுவலர்கள் விஜயசங்கரி, விக்டர் பெர்னாண்டஸ், வட்டார இயக்க மேலாளர் ராதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் சிவகுமார், திருக்கோஷ்டியூர் இந்தியன் வங்கி மேலாளர் ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் கூட்டுறவு வங்கி மேலாளர் முருகேஷ்வரன், திருப்பத்தூர் கூட்டுறவு வங்கி மேலாளர் கோதாண்டம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பணம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார இயக்க மேலாளர் ராதா ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Read Previous

மணப்பாறை: திடீரென தீ விபத்தால் பணம் எரிந்து நாசம்..!!

Read Next

NDA எம்.பி-க்கள் கூட்டம் – ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular