கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் போன் பே செயலிகள் தான் இந்தியாவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன எனவும், இனி இந்தியாவை சேர்ந்த செயலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் இந்தியா செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இதை கருத்தில் கொண்ட மத்திய அரசு, NPCI (national payments corporation of india) என்ற இந்திய அமைப்பு BHIM யை தனி நிறுவனமாக பிரித்துள்ளது. இனி BHIM செயலி, NPCI BHIM பிரைவேட் லிமிடெட் என்று தனி நிறுவனமாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தேவை அதிகமாவதால் இவ்வாறு பிரித்துள்ளோம் என்று NPCI கூறியிருக்கிறது. இதனால் அனைவரும் BHIM செயலியை அதிகமாக உபயோகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.