கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் மேப்பை நம்பி இளைஞர் ஒருவர் காரை ஆற்றுக்குள் விட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக அருகே இருந்த மரத்தில் கார் மோதி நின்றதால் காரில் இருந்த 4 பேரும் உயர் தப்பியுள்ளனர். தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செயற்கைக்கோள் படங்கள், வீதி வீதியாக செல்லும் அதிநவீன கார்கள் மூலமாக நொடிக்கு நொடி மேப்பை அப்டேட் செய்துவருவதாக கூகுள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.