சென்னையில் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு கார் ஓட்டி வந்த பெண் ஏழு பேர் மீது காரை ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியிணை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அசோக் நகர் பத்தாவது தெருவில் சரிதா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். அவரது வீட்டில் நடந்த விசேஷத்திற்காக அவரின் உறவினர்கள் அனைவரும் அவரின் வீட்டிற்கு வந்தனர். இரவு நேரத்தில் வீட்டில் அனைவருக்கும் உறங்க இடம் பற்றவில்லை, இதன் காரணத்தினால் உறவினர்களில் சிலர் வீட்டிற்கு முன்பு இருந்த ஒரு குறுகிய சாலையில் படுத்து உறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தை சார்ந்த வைஷாலி என்கின்ற இளம் பெண் அதிகாலை நேரத்தில் நான்கு மணிக்கு அந்த வழியில் வந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி நிற்காமல் சென்றுள்ளார். ஆனால் தெருமுனையை அவரால் கடக்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு மூட்டு சந்து அதனை தொடர்ந்து பொதுமக்கள் ஓடிச் சென்று அந்த பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தள்ளனர்.
காவல்துறையினர் அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் நான் கூகுள் மேப் பார்த்துக் கொண்டு கார் ஓட்டி வந்ததால் தான் இது இந்த விபத்தில் நடந்தது என கூறியுள்ளார். மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் மது போதையில் இருந்ததாக கூறியுள்ளனர். இதனால் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக காரில் அடிபட்ட யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.