கூகுள் மேப் காட்டிய வழியால் கால்வாயில் பாய்ந்த கார்..!! இன்ப சுற்றுலாவில் திகில் சம்பவம்.!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சார்ந்த சுற்றுலா பயணிகள் குழு கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்களின் எஸ்யூவி காரில் பயணம் செய்து உள்ளனர். இந்நிலையில் இவர்களின் கார் அதிகாலை 3 மணி அளவில் google map உதவியுடன் குறப்பந்தாரா  பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. அச்சமயம் கார் குறுக்கே இருந்த கால்வாயின் மீது பாய்ந்தது. காரில் இருந்தவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக வெளியேறி அப்பகுதி மக்களை உதவிக்கு அழைத்ததன் அடிப்படையில் அவர்கள் விரைந்து வந்து நால்வரை பத்திரமாய் மீட்டனர்.

மேலும் சில மாலை நேரத்திற்கு பின் கார் வெளியே எடுக்கப்பட்டது. கூகுள் மேப்பை பயன்படுத்தி இவர்கள் பயணம் செய்வதை தொடந்த நிலையில் மழை காரணமாக கால்வாயில் நீர் செல்வது தெரியாமல் தொடர்ந்து வாகனம் இயக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. நல்லதொரு வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் இன்றி அனைவரும் உயர்ந்த தப்பி உள்ளனர்.

Read Previous

பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு..!! தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!

Read Next

மனைவியை கொன்று, உடலை கூறுபோட முயற்சித்த கணவன்..!! நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular