சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 70களில் மக்களின் பொது வாழ்க்கை எப்படி இருந்தது தற்போது எப்படி மாறி இருக்கிறது என்பதை நினைக்கும் வேளையில் மிகவும் வியப்பாக உள்ளது..
அக்காலங்களில் ஒரு வீட்டில் நான்கு ஐந்து குடுத்தனங்கள் இருந்தன. தனி வீடு சொந்த வீடு என்ற கனவெல்லாம் அக்காலத்தில் யாருக்குமே இருந்ததில்லை எல்லாமே பெரும்பாலும் ஓட்டு வீடுகள் தான் நாலு கட்டு வீடு என்பார்கள் ஒரு ஓட்டு வீட்டில் 4 முறைகளிலும் நான்கு குடித்தன காரர்கள் இருப்பார்கள். வாடகை என்பது மாதத்திற்கு 40 அல்லது 50 ரூபாய் தான் குடித்தனக்காரர்கள் எந்த வேற்றுமையும் பாராது உடன்பிறப்புகளாக எண்ணி வாழ்ந்த காலம் அது. இங்கென்றும் அங்கென்றுமாக மாறிவிடுகள் காணப்படும். பிரிட்ஜ், ஏசி, மிக்சி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், ஸ்டீல் பீரோ, மோட்டார் சைக்கிள் கார் இது எதுவும் இல்லாத குதூகலமான வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டின் நிலை கதவும் எப்போதும் திறந்தே இருக்கும் இரவில் மட்டுமே மூடப்படும் வங்கிகளில் யாருக்கும் சேமிப்பு கணக்கு கூட இருக்காது எல்லாமே நேரடி பணப் பட்டுவாடா தான். மாத சம்பளம் என்பது பொதுவாக 100 ரூபாயிலிருந்து அதிக பட்சமாக 200 ரூபாய் வரை தான் இருக்கும் இதை வைத்தே அக்கால பெண்மணிகள் 7 பெயர்கள் கொண்ட குடும்பத்தை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். அதிலும் முடிந்தவரை மிச்சம் பிடித்து அவசர தேவைக்காக சேமித்திடும் பழக்கம் உண்டு. இப்போது போல அக்காலத்தில் தங்க நகைகளை யாரும் அதிகம் வாங்கியதே இல்லை யார் வீட்டிலாவது திருமணம் என்றால் தான் தங்க நகைகளை வாங்குவதை பற்றி யோசிப்பார்கள் மற்றபடி திருமணத்தின் போது போடும் தங்க நகைகள் மட்டுமே அன்றாட உபயோகத்தில் இருக்கும். அக்காலத் திருமணங்கள் பொதுவாக வீடுகளிலேயே நடைபெறும் தற்காலத்தை போல பிரம்மாண்டமான திருமண மண்டபங்கள் அக்காலத்தில் இல்லை. ஊரில் 200 சிறிய அளவிலான திருமண மண்டபங்கள் காணப்படும் சற்று வசதி படைத்தவர்கள் அங்கு திருமணம் செய்வார்கள். ஹோட்டல் என்பதெல்லாம் அக்காலத்தில் இல்லை இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு சிறு உணவகங்கள் இருக்கும். அதிலும் அவ்வளவாக கூட்டம் எல்லாம் இருக்காது சிறுவர்கள் சாப்பிட்டு மகிழ வீட்டிலேயே தின்பண்டங்கள் செய்து வைப்பார்கள். இட்லி தோசை மாவுகளை ஆட்டு கல்லில் போட்டு அரைப்பார்கள் சட்டினிமுதலியவற்றை அம்மியில் அரைப்பார்கள். இதனாலேயே அவை அக்காலத்தில் சுவை மிகுந்த உணவுகளாக இருந்தன தனியார் மருத்துவமனைகள் எல்லாம் அக்காலத்தில் கிடையாது ஏனென்றால் இது யார் என்பது எப்போதாவது தான் வரும் அனைவரும் நாடி செல்வது அரசு மருத்துவமனை தான். அந்த கால வாழ்க்கை என்பது அழகான சொர்கம்..!!