
கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மாதவரத்தில் மில்க் காலனி மூலச்சத்திரம் பகுதியை சார்ந்த முத்துச்சாமி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் பச்சையப்பன் ரோட்டை சார்ந்த சத்தியநாராயணன் என்பவர் முத்துசாமியிடம் உங்கள் மகள்களுக்கு கூட்டுறவு துறையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய முத்துச்சாமியும் சத்திய நாராயணரிடம் ரூ. 33 லட்சம் வரை கொடுத்தார்.
ஆனால் சொன்னபடி இதுவரை வேலை வாங்கி தரவில்லை. சத்யநாராயணன் தலைமறை தலைமறைவு ஆகிவிட்டார் இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துசாமி ஆவடி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் அடிப்படையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் சத்யநாராயணன் முத்துச்சாமியின் மகள் உட்பட ஒன்பது பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ74 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக சத்யநாராயணனின் மனைவி ஷாலினி மற்றும் தாமஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.