
சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இந்த சட்டங்களுக்கு இந்த குற்றங்கள் செய்பவர்கள் பயப்படுவதாக தெரியவில்லை. தொடர்ந்து இது போன்ற குற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் வருகின்றது.
இந்த விகிதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார் பகுதியில் 3 சிறுமிகள் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பாக மூன்று புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது. 16 வயதுடைய பள்ளி சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே பகுதியை செயல்பட்டு வரும் தனியார் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபரின் இரண்டு மகள்கள் அதே பண்ணையில் பணிபுரிந்து வந்த இரண்டு பேரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்சமயம் கர்மம் ஆகியுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அந்த இரண்டு நபர்களும் அந்த சிறுமிகளை கடுமையாக மிரட்டியதாகவும் இதன் காரணமாக பயந்து போன அந்த சிறுமிகள் இது குறித்து யாரிடமும் வெளியே சொல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது ஆனாலும் நாட்களில் செல்ல செல்ல வயிற்று வலியும் உடல் வலியும் அதிகரித்த காரணத்தால் துடித்த அந்த சிறுமிகள் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அந்த சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதன் பின் இவருடைய தங்கையும் கர்ப்பமாக உள்ளார் என்பது தெரிய வந்தது. பின்பு இரண்டு சிறுமைகளையும் விசாரித்த போது அவர்கள் நடந்த விவரம் அனைத்தையும் கூறிவிட்டனர். தற்பொழுது அந்த இரண்டு குற்றவாளிகளும் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை காவல்துறையினர் தீவிரமாய் தேடி வருகின்றனர்.
அந்த 16 வயது சிறுமியின் வழக்கு குறித்து சென்ற 27ஆம் தேதி அவர் பள்ளிக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து அவரை கடத்தி சென்று அந்த சிறுமியை கற்பழிக்கப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.