கூந்தல் அடர்த்தியாக வளரணுமா..?? அப்போ கண்டிப்பா இந்த எண்ணெய் பயன்படுத்துங்க..!!

கூந்தல் அடர்த்தியாக வளரணுமா..?? அப்போ கண்டிப்பா இந்த எண்ணெய் பயன்படுத்துங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் முடி கொட்டுவது தான். பலருக்கு முடி வளரவில்லை என்ற பிரச்சனை பலருக்கு முடி கொட்டுகிறது என்ற பிரச்சனை இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். கூந்தல் அடர்த்தியாகவும் மற்றும் முடி கொட்டுவதை நிறுத்தவும் முடி வளரவும் இந்த எண்ணெய் பயன்படுத்திப்பாருங்கள்.

ஒரு இரும்பு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அடுப்பை பற்ற வைத்து அந்த இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் சேர்த்து நன்றாக காய்ச்சவும். ஓரளவிற்கு காய்ச்சின பின்னர் அதில் ஒரு கையளவு கருவேப்பிலை, ஒரு கையளவு வேப்பிலை ,ஒரு கையளவு மருதாணி இலைகள் மற்றும் கரிசலாங்கண்ணிக் கீரை ஒரு கையளவு, நெல்லிக்காய் இரண்டு, சின்ன வெங்காயம் 3 சிறிதாக நறுக்கியது ,செம்பருத்திப்பூ இதழ்கள் பத்து மற்றும் வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம் அரை ஸ்பூன் பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக காய்ச்சி அடுப்பை அணைத்தபின் இரண்டு நாட்கள் மூடி போட்டு அப்படியே விட்டுவிடுங்கள். பின்பு இந்த எண்ணையை வடிகட்டி காற்று புகாத பாட்டிலில் வடிகட்டி கொள்ள வேண்டும். பின்பு இந்த எண்ணையை பயன்படுத்தி பாருங்கள் முடி அடர்த்தியாகும். முடி கொட்டுவது நின்று விடும்.

Read Previous

வாழ்வில் வெற்றி பெற முத்தான வழிகள்..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ரூ.42,000/- ஊதியத்தில் IIT Madras- ல் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular