கூரான கண்பார்வையும் சீரான வாழ்க்கையும் வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்யுங்க..
20-20-20 விதியை பழகுங்கள்-நீங்கள் அதிக நேரம் பிறை பார்ப்பது உங்கள் கண்ணில் சோர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் இதை எதிர்த்து நீங்கள் போராட வேண்டுமெனில் நீங்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் உற்றுப் பார்க்க வேண்டும், நீங்கள் திரையில் மூழ்கி இருக்கும்போதோ இதை செய்ய வேண்டும் இந்த நுட்பம் உங்களின் கண்களில் உள்ள தசைகளை அமைதிப்படுத்தும் உங்களுக்கு கண்களில் அழுத்தம் ஏற்படாமல் காக்கும், உங்கள் கண் பார்வைக்கு சிறந்தது..
கண் பயிற்சிகள் : உங்கள் கண்களில் உள்ள தசைகளை வலுப்படுத்தினால் அது உங்கள் கவனம் மற்றும் கண்களின் நெகிழ்த்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் எனவே நீங்கள் உங்கள் கண்களுக்கு அருகில் உள்ள ஒரு பொருளை சிறிது நேரம் உற்றுப் பாருங்கள் அடுத்த தொலைவில் உள்ள ஒரு பொருளை சிறிது நேரம் உற்றுப் பார்க்க வேண்டும் இதனால் உங்கள் பார்வை தெளிவாகும் சில நிமிடங்களுக்கு கண்களை தொடர்ந்து சிமிட்ட வேண்டும் அப்போது உங்கள் கண்கள் அமைதி பெறும்..
கண்பார்வையை கூறாக்கும் உணவுகள் சாப்பிட வேண்டும் – நீங்கள் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும் அதில் வைட்டமின் ஏ ஒமேகா 3 பேட்டி ஆசிட்கள் லீடீன்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் கட்டாயம் இருக்க வேண்டும் கேரட் கீரைகள் வால்நட் மற்றும் கண் ஆரோக்கியத்தை தரும் உணவுகள் இருக்க வேண்டும். இவற்றை அன்றாடம் உங்கள் உணவில் உட்கொள்வதை நீங்கள் வழக்கமாக வேண்டும் இந்த உணவுகள் உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும், உங்கள் பார்வையை கூறாக்கும்..
போதிய உறக்கம் : உங்கள் கண்களுக்கு போதிய ஓய்வு தேவை அப்போதுதான் அது தன்னை சரி செய்து கொள்ளும் அன்றாடம் கண்களில் ஏற்படும் கடுமையான அபாயத்தை போக்கும் உறக்கம் தடைபட்டாலே அது உங்களுக்கு வறட்சி எரிச்சல் மற்றும் கண்கள் மங்கலாக தெரிவது ஆகிய தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் இது உங்கள் கண் ஆரோக்கியம் புத்துணர்வு மற்றும் முழு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் : சூரிய ஒளியில் செல்லும்போது கண்களின் திசுக்கள் பாதிக்கப்படும் இதனால் எப்போதும் நீங்கள் வெளியே செல்லும்போது கண்களில் குளிர்கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் இது உங்கள் கண்களுக்கு சூரிய ஒளிகள் செல்லும் போது 100% இருந்து பாதுகாப்பை தரும் அதிக சூரிய வெளிச்சம் இருக்கும்போது நேரடி சூரிய ஒளியில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்கும் இது உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்..
நீச்சத்துடன் இருங்கள் : உங்கள் உடலை எப்போதும் நீர்சுத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் குறிப்பாக எரிச்சல் ஏற்படும் எனவே போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் அப்போதுதான் கண்ணீர் உற்பத்தியும் சரியாக நடக்கும் கண்ணும் நீர்ச்சத்துடன் இருக்கும், எனவே தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் கிட்டத்தட்ட எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக கொள்ளுங்கள் உங்கள் கண்களில் ஈரம் இருக்க வேண்டும் அது கண்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும்..!!




