நடிகர் கூல் சுரேஷ் பால்வாடிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு சேர் மற்றும் சில பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்ற திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் கூல் சுரேஷ். அதைத்தொடர்ந்து சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலும் சந்தானம் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இவரை பார்க்க முடியும். சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்துடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களின் நடித்திருக்கின்றார்.
மேலும் சிம்புவின் மிகப்பெரிய ஃபேன். அதனால்தான் அவரின் திரைப்படங்களை ஃப்ரீயாகவே புரமோஷன் செய்து வருவார். அதிலும் இவரது டயலாக் எப்பொழுதும் ஃபேமஸ்-ஆக இருந்து வருகின்றது. வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு என்று எங்கு போனாலும் கூறிக்கொண்டு செல்வார். அது மட்டுமில்லாமல் வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்கு பெரும்பாலான பிரமோஷன் இவரே செய்துவிட்டார்.
தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் விமர்சகராக இருந்து வருகின்றார். எந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானாலும் அந்த திரைப்படத்திற்கு முதல் ஆளாக சென்று பார்த்துவிட்டு படம் குறித்த விமர்சனங்களை கூறி வருகின்றார். அதிலும் எந்த படத்திற்கு போகிறாரோ அப்படத்திற்கு ஏற்றவாறு கெட்டப் போட்டுக் கொண்டு செல்வது தான் இவரின் மற்றொரு பிளஸ் பாயிண்ட். ஏனென்றால் அப்போதுதான் மற்றவர்கள் நம்மை கவனிப்பார்கள் என்பது இவரின் யுக்தி.
அதுமட்டுமில்லாமல் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இவர் சில சர்ச்சையான விஷயங்களைப் பேசியே ஃபேமஸ் ஆகி விட்டார். தற்போது புதிதாக கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக தெரிவித்திருந்த அவர் சிஎஸ்கே என அதற்கு பெயரிட போவதாகவும் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் சில நல்ல விஷயங்களையும் அவர் செய்து வருகின்றார். சமீபத்தில் ஒரு நபருக்கு ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார் .இது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து இருந்தார்.
அதன் பின்னர் தற்போது பிரபல பிரியாணி கடையின் உரிமையாளர் ஆர் தமிழ்ச்செல்வனின் பிறந்த நாளை முன்னிட்டு சுவாச மனிதநேய அறக்கட்டளை பெயரில் நடிகர் கூல் சுரேஷ் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல்லாவரம் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற அவர் அங்கு 45 பிளாஸ்டிக் நாற்காலிகளில் வழங்கியிருக்கின்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது” பிளாஸ்டிக் நாற்காலிகளை குழந்தைகளுக்கு வழங்கியிருக்கிறோம்.
இது விளம்பரத்திற்காக அல்ல கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது, தகாத உறவு, திருட்டுத்தனம் போன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றது. அதேபோல் நல்லது செய்வது தொடர்பான வீடியோவும் வெளியானால் நாம் ஏன் உதவி செய்யக்கூடாது என்ற நோக்கம் பலருக்கும் வரலாம் என்பதற்காகத் தான் இதை பதிவிடுகிறேன்” என்று கூறியிருந்தார். அப்போது அங்கு இருந்த குழந்தை அவரின் பேச்சைக் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வீடியோவானது வைரலாகி வருகின்றது.