கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் : வித்தியாசமாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார் தான் நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்று இருந்த வசனத்தை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இந்த புத்தாண்டு வாழ்த்தினை நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்…

2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது இதனை முன்னிட்டு நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியது..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அதே போல் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கூடும். பொது இடங்களிலும் மக்கள் கூடி 2025 ஆம் ஆண்டு உற்சாகமாக வரவேற்றனர்..

முதல்வர் வாழ்த்து ; அதேபோல தமிழக மக்களுக்கு தலைவர்கள் பலரும் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர் முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடுவோம் எங்கும் நலமே சுழட்டும் என்று வாழ்த்தி உள்ளார். அதேபோல் தாவெக தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார் அவர் தன்னுடைய வாழ்த்து செய்தியில் மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை மன்னுரிமை காப்போம் உழவர்கள் தொழிலாளர்களின் நலன் காப்போம் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்போம் உண்மையான சமூக நீதியுடன் சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி ஒற்றுமை சகோதரத்துவம் மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்..

ரஜினிகாந்த் ; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார் பொங்கல் தீபாவளி மற்றும் புத்தாண்டு தினங்களில் தன்னுடைய ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்து கூறுவது வழக்கமாகும். ஆகவே சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் அதிகாலையிலேயே வருகை தருவார்கள் ரஜினியின் வாழ்க்கை பெறுவதற்காக நள்ளிரவு முதலில் சிலர் காத்து கிடப்பார்கள் கடந்த வருடம் கூட தன்னுடைய வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினி 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தான் நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை குறிப்பிட்டு இந்த புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்..

அந்த பதிவில் நல்லவங்களை ஆண்டவர் சோதிப்பான் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்டிடுவான் என்று புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..!!

Read Previous

மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த பழக்கத்திற்கு குட்பாய் சொல்லுங்க இனி உங்க வாழ்க்கை சந்தோசமா தான் இருக்கும்..!!

Read Next

மிருதுவான பாதங்கள் பெற உதவும் தயிர் கிரீம் ; வீட்டில் இருந்தபடியே உங்கள் பாதங்களை மிருதுவாக மாற்றலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular