
பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் தெய்வத்திடம் தன்னிடம் இல்லாததையும், தன்னிடம் இது எல்லாம் இருக்க வேண்டும் என்றும் வேண்டுவார்கள். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் என்றும், மன நிம்மதி வேண்டும் என்றும், தொழில் செய்பவர்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் இது நன்றாக லாபம் வர வேண்டும் என்றும் வேண்டுவார்கள். எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி அதை தெய்வத்திடம் கூறினால் அதற்கு ஒரு தீர்வு உருவாகும் என்று பலரும் நம்புவார்கள்.
இந்நிலையில் நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதற்கு ஆன்மீகத்தில் எளிமையான ஒரு பரிகாரம் ஒன்று உள்ளது. இதை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள், கண்டிப்பான பலன் உங்களுக்கு கிடைக்கும்.
நம் வீட்டு சமையலறையில் தினமும் பயன்படுத்தும் கல் உப்பை வைத்து இவ்வாறு செய்தால் நம்மிடம் இருக்கும் பிரச்சினைகள் தீரும் என்று சொன்னால் நம்புவீர்களா..!! ஆம் ஆம் கல் உப்பு என்பது மகாலட்சுமியின் மறு உருவம் என்று கூறப்படுகிறது. கல் உப்பிற்கு நேர்மறை ஆற்றல்களை விரைவில் ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளது. மேலும், எதிர்மறை ஆற்றல்களை போக்கும் தன்மையும் இதற்கு அதிகம் உள்ளது. கல் உப்பு தெய்வீக சக்தியையும், நேர்மறையான சக்தியையும், தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனை பூஜை அறையில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த கல்லுப்பை பூஜை அறையில் வைத்து நம் மனதில் உள்ளதை கடவுளிடம் கேட்டு வழிபட்டு வந்தால் உடனே பலன் கிடைக்கும். மேலும், நிலை வாசலுக்கு அருகில் அல்லது நிலை வாசலில் சிறிது உப்பை ஒரு துணியில் சேர்த்து முடிச்சாக கட்டி வைப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும். எனவே இதை அனைவரும் ட்ரை பண்ணி பாருங்க.