ஈரோடு ரயில் நிலையத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாகவே ஈரோடு வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஈரோடு ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களையும் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று இரவு ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்த எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்பொழுது முன் பதிவு செய்யப்பட்ட எஸ்1 பெட்டியில் கழிப்பறை அருகே சோதனை ஈடுபட்டபோது ஒழ பை கேட்பாறற்று கிடந்துள்ளது.
அதனை காவல்துறையினர் திறந்து பார்த்ததில் ஒன்பது கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் ஒன்பது கிலோ கஞ்சாவை கைப்பற்றி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் கஞ்சா கடத்திய கும்பல் காவல்துறையினர் வருவதை கண்டு பையை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஈரோடு மதுவிலக்கு அமலாக்க துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.