ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் இரண்டாவது பாடல் வருகிற 28ம் தேதி வெளி வர இருக்கிறது..
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகரும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாவது பாடல் “ரா மச்சா மச்சா..”ப்ரோமோ வீடியோ வரும் 28ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது, இப்பாடலை விவேக் எழுதியுள்ளார் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகிவிடும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்,கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா அஞ்சலி ஸ்ரீகாந்த் சமுத்திரகனி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள், மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்க்கை பெற்றுள்ள நிலையில் வருகிற 28ஆம் தேதி இரண்டாவது பாடல் வருவதை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர், மேலும் பட குழுவினர் விரைவில் அதாவது டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் விழாவை சிறப்பிக்க இப்படம் வெளிவர இருப்பதாக பட குழு தெரிவித்துள்ளது..!!




