
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வாடானா பள்ளி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள் திடீரென கரை ஒதுங்கின அலைகளில் அடித்து வரப்பட்ட மீன்கள் கரையில் துள்ளி குதித்தனர் இதை அறிந்த அப்பகுதி மக்கள் கரை ஒதுங்கிய மீன்களை அள்ளி சென்றனர், கடந்த சில வாரங்களில் தற்போது மூணாவது முறையாக மத்தி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது..
கேரளா திருச்சூரில் ஏற்பட்டுள்ள மத்தி மீன்கள் கரை ஒதுங்கியது போலவே தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு கடற்கரை ஓரங்களில் மீன்கள் கரை ஒதுங்கியதை கண்டிருப்போம் இது கடலில் ஏற்படும் சீற்றத்தின் அறிகுறியை முன்பே உணர்த்துவதாக இருப்பதா என்று மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது, மேலும் வானிலை காரணமாக கடலில் ஏற்படும் கார்பெழுத்து தாழ்வின் காரணம் கூட மீன்கள் கரை ஒதுங்குவதற்கு காரணமாக இருக்கும் என்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர், கரை ஒதுங்கிய மீன்களை மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து அதனை அள்ளி சென்றனர் இச்சம்பவம் பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளது இணைய பக்கத்தில்..!!