
கேரளாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு வரலாறு காணாத அளவு ரூ.665 கோடி மதுபானங்கள் விற்பனை.
ஓணம் பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஜாதி மதம் என பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படுகின்ற இந்த பண்டிகையால் மாநிலம் முழுவதும் விழா கோலமாக காணப்படும்.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரையில் கொண்டாடப்பட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 320 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளுக்கும் 500 க்கும் மேற்பட்ட பார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் எட்டு நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 675 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதே போல் கடந்த ஆண்டு எட்டு நாட்களில் 624 கோடி மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட சுமார் 41 கோடி அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 28ஆம் தேதி மட்டும் மாநில முழுவதும் 116 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. அன்றைய தினத்தில் இரு இரிஞ்ஞாலகுடா பகுதியில் ரூ.1.06 கோடிக்கும் கொல்லம் பகுதியில் 1.01 கோடிக்கும் சங்கனாச்சேரி பகுதியில் 95.78 லட்சத்துக்கும் சாலக்குடியில் ரூ 88.69 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.