கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக மக்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்ததன் விளைவாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் ஆனது ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பதற்றமான சூழல் நிலவி உள்ள நிலையில் அச்சப்பட தேவையில்லை என்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயின் அறிகுறிகள் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவைகளாகும். தற்போது தமிழக மக்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் குறித்து அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்நோய் பரவலை தடுக்க முடியும் என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது