
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கும் அவரது அண்டை வீட்டில் வசித்து வந்த அவரது மனைவியின் சகோதரி குடும்பத்திற்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 2021ஆம் வருடம் அக்டோபர் மாதம் திடீரென அந்த வீட்டிற்குள் நுழைந்த ஷாஜகான், 6 வயது சிறுவனை கொலை செய்து, 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது, அதன்படி, அவருக்கு மரண தண்டனையுடன் 92 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.