கேரளா அடித்த பல்டி..!! வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் ஒரு புதிய திருப்பம்..!!

நமது நாட்டில் கடந்த சில நாட்களாக வெடித்து வரும் ஒரு பிரச்சனை தான் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா. இந்த திட்டத்திற்கு பல பேர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்து உள்ளனர். மிகசிலர் ஆதரித்தும் வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் பல போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளது. பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் கோஷம் எழுப்பி வருகிறது. இதில் கேரள மாநிலம் வெகு நாளாக இதற்கு எதிர்ப்பு தந்து வந்தது.

ஆனால் இப்பொழுது இந்த சட்ட திருத்த மசோதாவை ஒப்புக்கொண்ட குடியரசுத் தலைவர் இதை சட்டமாக்கியுள்ளார். இந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக இந்த மசோதாவை ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதலில் இதற்கு கேரளா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் கடுமையாக எதிர்த்து விட்டு இப்பொழுது ஏன் முதல் மாநிலமாக அமல்படுத்துகிறீர்கள் என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் அடுத்தது எந்த மாநிலம் இதை ஒப்புக்கொண்டு சட்டமாக்கும் என்று மக்களால் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகிறது.

Read Previous

மண்பானையில் பொங்கல் சமைப்பது ஏன் தெரியுமா..?? அதற்கான காரணம் என்ன..??

Read Next

திருமண அழைப்பிதழ்களை கையில் கொடுக்காமல் தாம்பூல தட்டுகளில் வைத்து கொடுப்பது எதனால் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular