கேரளா ஸ்டைல் தேங்காய் சாதம்..!! இப்படி செய்தால் கம கமக்கும்..!!

அதிக மனத்துடன் உள்ள தேங்காய் சாதம் அனைவருக்கும் பிடித்த உணவாக உள்ளது. இந்த தேங்காய் சாதத்தை கேரளா ஸ்டைலில் செய்தால் தேங்காய் சாதம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

  • அரிசி ஒரு கப்
  • துருவிய தேங்காய் அரை கப்
  • கடுகு கால் தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
  • முந்திரி கால் கப்
  • உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  • வரமிளகாய் எட்டு
  • பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  • கருவேப்பிலை ஒரு கொத்து
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசியை நன்றாக அரை மணி நேரம் ஊற வைத்து சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அழைப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி கொள்ளவும். பின்னர் சாதத்தை தட்டில் போட்டு உலர வைக்கவும்.

அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, முந்திரி, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வருக்கவும்.

அடுத்து துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக அளவிற்கு வதக்க வேண்டும். இந்த கலவையானது ஓரளவு பொன்னிறமாக  வந்ததும் ஆற வைத்துள்ள சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்கவும். இவ்வாறு செய்தால் தேங்காய் சாதம் அதிக மனம் மற்றும் சுவையில் இருக்கும்.

Read Previous

BREAKING: செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: சிறைக்கு மாற்றம்..!!

Read Next

நமது குலதெய்வம் மனம் உருகி நமது வீட்டில் வந்து தங்க இந்த பரிகாரங்கள் செய்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular