உடல் எடையை குறைப்பவர்களுக்கு அருமையான செய்முறை..!! கேழ்வரகு கொள்ளு தோசை செய்து பாருங்கள்..!!

நாம் எப்போதும் இரவு நேரங்களிலும் காலை நேரங்களிலும் தோசையை தான் அதிகமாக விரும்பி சாப்பிட்டு வருகிறோம். ஆனால் ஒரே மாதிரியான தோசைகள் சாப்பிட்டு நமக்கு சலித்து போய் இருக்கும். அதுவும் இல்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்போர் தோசையை சாப்பிட சற்று யோசிப்பார்கள். ஆகையால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சத்தான கேழ்வரகு கொள்ளு தோசை செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு – 2 கிண்ணம்,

கொள்ளு – அரை கிண்ணம்,

ஜவ்வரிசி – 4 கரண்டி,

வெந்தயம் – 2 கரண்டி,

உப்பு, நெய் – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கேழ்வரகு கொள்ளு வெந்தயம் மற்றும் ஜவ்வரிசியை கழுவிய பின் ஒரு எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனை கிரைண்டரில் போட்டு நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும். தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து தோசை போல இந்த மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கேழ்வரகு கொள்ளு தோசை தயார்.

Read Previous

பருப்புப் பொடி ரெசிபி இப்படி செய்து பாருங்க..!! முழு செய்முறை உள்ளே..!!

Read Next

நிலக்கடலை சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular