நாடு முழுவதும் 19 எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை கிடுகிடு உயர்வு..
நாடு முழுவதும் 19 எடை கிலோ கொண்ட வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் கேஸ் எரிவாயுவின் விலையானது கிடுகிடு என உயர்ந்துள்ளது, இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ரூபாய் 38 உயர்ந்து மேலும் சிலிண்டர் ஒன்றுக்கு ₹1855 என விற்பனையாக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளது, இதன் மூலம் தொடர்ந்து ஆறு மாத காலமாக வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் வணிகத்தில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர், 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையானது ரூ818.50 விற்கு விற்பனை செய்து வருகிறது என்றும் தெரிவித்தனர்..!!