கையில்லாத நபர் ஒருவருக்கு KPY பாலா செயற்கை கை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண வீடியோவானதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் கே பி ஒய் பாலா. இந்த நிகழ்ச்சி மூலமாக பிரபலமான இவர் அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். விருது வழங்கும் விழா உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற இவர் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்படி ஜூங்கா, தும்பா, சிக்ஸர், புலிகுத்தி பாண்டி, லாபம், அண்டி இந்தியன், நாய் சேகர், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஹீரோவாகவும் நடிக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். ராகவா லாரன்ஸ் மாஸ்டரை பின்தொடர்ந்த KPY பாலா தொடர்ந்து பல ஏழை எளியவருக்கு உதவி செய்து வருகின்றார். ஏழை குழந்தைகள், படிக்க முடியாத குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்கள் என அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்து வருகின்றார் கே பி ஒய் பாலா.
தன்னிடம் இருக்கும் பணத்தை தனக்கென வைத்துக்கொள்ளாமல் அப்படியே பிறருக்கு கொடுத்து உதவி செய்து வருகின்றார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் என்ற அறக்கட்டளையின் மூலமாக பலருக்கும் உதவி செய்து வருகின்றார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தொடர்ந்து பலருக்கும் உதவி செய்து வரும் கேபிஒய் பாலா இந்த முறை கை இல்லாத ஒரு நபருக்கு உதவி செய்திருக்கின்றார். கை இழந்த ஒரு நபருக்கு செயற்கை கை ஒன்றை வாங்கிக் கொண்டு போய் அவருக்கு போட்டுவிட்டு அழகு பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram