கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹோஸ்ரிட்டி கிராமத்தில் ஒரு தனியார் மொபைல் பழுது பார்க்கும் கடையில் இரண்டு இளைஞர்கள் வேலை செய்து வந்த போது திடீரென வேலை செய்து கொண்டிருந்த மொபைல் போன் வெடித்ததில் அந்த இடமே தீ விபத்து ஏற்பட்டுள்ளது, சம்பவத்தில் அந்த இரண்டு இளைஞர்களுக்கும் எந்த விதமான தீ காயங்கள் இன்றி நலமாக உள்ளார்கள் என்றும் தெரியவந்தது.
மேலும் இன்னும் சில இடங்களில் மொபைல் போன்கள் பழுது பார்க்கும் போது திடீரென்று வெடிக்கும் சம்பவம் பெருகி வருகிறது இதனால் வேலை செய்யும்போது கூடுதல் கவனமாகவும் தங்களை எந்தவித அசம்பாவித நிகழ்வில் இருந்து பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இணையவாசிகள் தங்களது கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்..!!