நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே ஒரு சில பொருட்களை எல்லாம் தவறி கீழே விழுந்தால் அசுபம் என்று குறிப்பிடுவார்கள். குறிப்பாக நாம் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது குங்குமம் தவறி கீழே விழக்கூடாது இவ்வாறு விழுந்தால் அசுபம் ஏற்படும். இதனால் அஸ்மி தேவி கோபமாக இருப்பதாக அர்த்தம் எனவும் ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. சில சமயங்களில் நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ, பொருட்களை நம் கையில் இருந்த நிலவில் கீழே விழுவதை அடிக்கடி பார்க்கிறோம். இந்நிலையில் நம் கைகளில் இருந்து இந்த ஐந்து பொருட்களை தவறி கூட கீழே விழ விட்டு விடாதீர்கள் இதனால் அசுபம் ஏற்படும். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உப்பை ஒருபோதும் கையில் இருந்து விழுவதற்கு நாம் விட்டு விடக்கூடாது. அப்படி உப்பு தவறி கையில் இருந்து கீழே விழுந்தால் கூட அது அசுபமாக கருதப்படுகிறது. உப்பு அடிக்கடி கீழே கை தவறி விழுந்தால் திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும் என்னையும் கையில் இருந்து விழுந்தால் அது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பெரிய பிரச்சினையை குறிக்கிறது என்று அர்த்தம். இதனால் நாம் கடனாளியாக கூட வாய்ப்பு உள்ளது. எண்ணெய் தவறி தவறி கீழே விழுந்தால் அது மிகப்பெரிய அசுபமாக கருதப்படுகிறது. பூஜை தட்டு கையில் இருந்து விடுவது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இப்படி பூஜை தட்டு அடிக்கடி கீழே விழுந்தால் கடவுள் நம் மீது மிகவும் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம்.




