• September 29, 2023

கை அகற்றப்பட்ட குழந்தை மரணம் – இபிஎஸ் இரங்கல் மற்றும் கண்டனம்..!!

எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்தது. இந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனையடைந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், இந்த “துயர நிகழ்விற்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அலட்சியம் அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை. மக்களை காக்கும் கடமையில் அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்கிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

எல்கேஜி சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த பள்ளி வேன் ஓட்டுநர்..!!

Read Next

திருமணமான இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular