• September 29, 2023

கை அழுகிய விவகாரம் – கதறும் தாய்..!!

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர் மற்றும் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் இன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவக்குழு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அஜிஷா, “என் குழந்தைக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை குழுவிடம் தெரிவித்தேன். மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால் தான் என மகன் வலது கையை இழந்துள்ளான். எனது குழந்தையை குறை மாத குழந்தை என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதால் நான் உடைந்துவிட்டேன். விசாரணை திருப்திகரமாக இருந்தது, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை ஆய்வு..!!

Read Next

தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது..!ஆளுநர் அதிரடி உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular